தேனி: வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஊர்க்காவல் படையினர் கடைபிடிக்க வேண்டிய பணிமுறைகள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் விதம் குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹா ப்ரியா அவர்கள் முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், தேர்தல் கட்டுப்பாட்டு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். தேவராஜ் (DCRB), காவல் ஆய்வாளர் திருமதி முத்துலட்சுமி, ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, தேர்தல் பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதி செய்ய விவாதித்தனர். இந்த ஆலோசனை கூட்டம், தேர்தல் பாதுகாப்பு பணிகளை திறம்பட நிறைவேற்றும் நோக்கில் நடைபெற்றது.




















