திருநெல்வேலி: தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நடுநிலை வாக்குச்சாவடி, முக்கிய வாக்குச்சாவடி மிக முக்கிய வாக்குச்சாவடி என பிரித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,
பிரச்சனைக்குரிய பகுதிகளின் நிலவரங்களை கண்டறிந்து பிரச்சினைகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக கூறினார்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.