சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, காரைக்குடி மகாராஜா நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தலைவர் டாக்டர் குமரேசன் மற்றும் வாசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் கீர்த்தி ஸ்வஸ்திகா ஆகியோர் துவக்கி வைத்தனர். பொதுமக்களிடம் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















