பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவினை பின்பற்றுவோம், கொரோனா பரவலை அகற்றுவோம் என்பதை வலியுறுத்தி செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசால் சில தளர்வுகளுடன் கூடிய முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 10.05.2021 இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய பொறுப்பு அதிகாரிகள், ஆளிநர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா ஊரடங்கு சம்பந்தமான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஒலிபெருக்கி மூலமாகவும், தண்டோரா மூலமாகவும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்து வருகின்றனர்.