திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(41).1 இவர் வேலூர் சத்துவாச்சாரியில்காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி செல்வராஜ்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான காமக்கூர் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து அவரது உடலுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் 21 குண்டுகள் முழங்க மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உடலை அரசு மரியாதை செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் வேலூர் எம்எல்ஏ ப.கார்த்திகேயன்,ஆரணி காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.எஸ்.கிருஷ்ணன் உட்பட உறவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்