ராமேஸ்வரம் :கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிற நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இதனால்
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராமேஸ்வரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் அவர்கள் காவலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த ஆதரவற்ற மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் உணவின்றி பசியால் வாடி வந்தனர் . இதனை அறிந்த ராமேஸ்வரம் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் அவர்கள் காவலர்களுடன் சென்று ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்