திண்டுக்கல்: கொரோனா பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் சாலையோரம் மற்றும் மேம்பாலங்களில் கீழ் பகுதிகளில் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு கிடைக்காமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அது போன்ற நபர்களுக்கு போலீசார், தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இதனால் பலருக்கு உணவு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. ஒரு சிலர் உணவு கிடைக்காமல் சிரமப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அது போன்ற நபர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் — முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவர்கள் போலீசார் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் அவர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உடனடியாக வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிப்பவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்9498101520 எனும் எண்ணிலும், நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை9176098100எனும் எண்ணிலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை9498181204 எனும் எண்ணிலும் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட சூப்பிரண்டு ரவளிப்ரியா அறிவித்துள்ளார்.