திருநெல்வேலி: ஊரடங்கு நாட்களில் ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு அளித்து வரும் வள்ளியூர் காவல்துறையினர்
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியூர் பஜார் ,பழைய பேருந்து நிலையம், முருகன் கோவில் மற்றும்
கள்ளிகுளம் ஆகிய பகுதிகளில் பசியால் வாடிய ஆதரவற்றோர்களுக்கு வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு அருண் ராஜா அவர்கள், ஏற்பாட்டில் ஊரடங்கு நாட்களில் தினமும் காலை மற்றும் மதியம் நேரங்களில் ஆதறவற்ற மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
மேலும் உதவி ஆய்வாளர் திரு அருண் ராஜா அவர்கள் வள்ளியூர் பகுதியில் பசியால் உணவின்றி இருக்கும் மக்கள் அவரது தொலைபேசி எண் 83000-22388 எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.