திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கிராமிய உட்கோட்டம், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் எண் 636 தெய்வதிரு.R.துரைமுருகன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 05.04.2021அன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு உதவும் வகையில் 1997-II பேட்ஜ் காவலர்கள் முயற்சி செய்து திரட்டிய ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி.IPS., அவர்களின் முன்னிலையில் வழங்கினர். தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்கள் உடனிருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்