சேலம்: சேலம் அருகே உள்ள கருணைநகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தனபால் 25. என்ற இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடுத்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து,இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் திருமதி.இந்திரா தீவிர விசாரணை செய்து விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார்.
போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிபதி திரு.முருகானந்தம் வழக்கினை விசாரித்து தனபாலுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.