திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பின் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 65 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் மற்றும் 15 நபர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் அனைத்து வணிகரிகளின் பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் ஏ.கே.சுரேஷ் மற்றும் வணிகர்களின் பேரமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தார். வணிகர்களின் பேரமைப்பு செயலாளர் முகமது அலி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், ஆகியோர் கலந்து கொண்டு இலவச கண் கண்ணாடியை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் திமுக மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் கா.சு.தமிழ் உதயன் மற்றும் மீஞ்சூர் அனைத்து வணிகர் கலந்துகொணடனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு