திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த்,36. இவர் 2013 பேட்ச் காவலர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து போனார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2013 பேஜ் காவலர்கள் 2020 ஆம் ஆண்டு இறந்த சக காவலரான அருள் ஆனந்த் என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் உதவி செய்துள்ளனர். இதுகுறித்து காவலர்கள் கூறியதாவது:
அருமையான நண்பரை இழந்து விட்டோம். அவர் குடும்பம் கண்ணீரில் தவிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மீள்ச்சி பெறவேண்டும் என்பதற்காக நண்பர்களாக உதவி செய்து இந்த தொகையை வசூலித்தோம். எங்கள் நண்பரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் ,என்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா