தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.தங்கராஜ் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார். அவருடன் பணியில் சேர்ந்த 1994 Batch காவல் துறை நண்பர்கள் ஒருங்கிணைந்து பணம் திரட்டி தங்களது சார்பில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் மறைந்த திரு.தங்கராஜ் அவர்களின் மனைவி திருமதி.கவிபிரியா அவர்களிடம் ரூபாய் 3,75,000/- தொகைக்கான காசோலையினை வழங்கினர். இதில் அவருடைய மகன் அஜய் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் திரு.காவேரி, திரு.சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.