திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளீர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திருமதி R.சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்.
இதனால் அவரின் மகன்களான கோபிநாத் மற்றும் கோகுல்நாத் ஆகிய இருவருக்கும் உதவும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறை ஆளினர்கள் 18,06,320/- வழங்கினர்.
இதில் அவரது மகளான கோபிநாத் மற்றும் கோபிநாத் ஆகிய இருவருக்கும் தலா 9,03,160/- ரூபாய்க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பவன் குமார் அவர்கள் வழங்கினார்.
உடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜகாளீஸ்வரன் அவர்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் திருமதி.சந்திரிகா அவர்களின் மகன்களுக்கு உதவும் வகையில் உடனடி தேவைக்காக மாவட்ட காவல் துறையினர் மூலம் ரூபாய் 50,000/- வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியாக 3 லட்சம் அரசிடமிருந்து பெற்று தரப்பட்டுள்ளது. குடும்ப பொது நிவாரண நிதியிலிருந்து இரு மகன்களுக்கும் தலா 3 லட்சம் அரசிடமிருந்து பெற்று தரப்பட்டுள்ளது.
மேலும் அவரது மகன்களுக்கு கருணை அடிப்படையிலான வேலைக்கும், ஓய்வூதியத்திற்கும் ஆவண செய்யப்பட்டு வரப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்