பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகன் செல்வராஜ் என்பவர் தான் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த TN 91 Z 9372 என்ற இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றுவிட்டதாக மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலைய குற்ற எண் 450/22 U/s 379 IPC-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் இன்று 23.11.2022-ம் தேதி மங்களமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. இளையபெருமாள், குற்றப்பிரிவு தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார் மற்றும் அவரது குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 1.அஜித் 22. மற்றும் 2. விஜய் 20. செங்குட்டுவன் ஆகிய இருவரையும் விசாரணை செய்ததில் மேற்படி வழக்கின் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து நிலையம் அழைத்து வந்து அவர்களிடமிருந்த மேற்படி வழக்கின் சொத்தான இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு மங்களமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.இளையபெருமாள் அவர்கள் அனுப்பி வைத்தார்.
மேற்படி குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் மற்றும் மங்களமேடு காவல்நிலைய காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.