ஈரோடு: ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம், பர்கூர்ரோடு, அண்ணாமடுவு, சத்தி ரோடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தியூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.