இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. இந்த இடங்களில் உள்ள கடற்கரையில் ஆண்டுதோறும் புரட்டாசி மஹாளய அமாவாசை நாளில் உள் மாவட்டம், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் 144 CrPC தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டும், பொதுமக்கள் நலன் கருதியும் வருகின்ற 17.09.2020-ம் தேதி புரட்டாசி மஹாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கும் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்காக இராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டிணம், மாரியூர் (சாயல்குடி) மற்றும் பிற கடற்கரையோர இடங்களிலும் சடங்குகள் செய்வதற்கும், மக்கள் கூடுவதற்கோ, குளிப்பதற்கோ, புனித நீராடுவதற்கோ அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால், அன்றைய தினம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் தரிசணத்திற்கான இணையதள முன்பதிவு கோவில் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படியும் பக்தர்கள் யாரும் இராமேஸ்வரம் வருவதை தவிர்க்க வேண்டும்; என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் திரு.E.கார்த்திக், இ.கா.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்