தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் (04.03.2023)-ம் தேதி இராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ராமேஸ்வரம் கடற்காவல் நிலைய கோப்புகளையும் பதிவேடுகளையும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். கடத்தல் தடுப்பு மற்றும் மீட்பு பணி போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 20 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பண வெகுமதியும் அளித்து பாராட்டினார்கள். இந்திய கடற்படை படகு தளத்திற்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அதிவிரைவு ரோந்து படகுகளை ஆய்வு செய்து பிறகு ராமேஸ்வரம் முதல் அரிச்சல் முனை வரை ரோந்து படகில் சென்று கச்சத்தீவு யாத்திரைக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி