இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் பகுதியில் சுயம்புகனி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, நகைகளை திருடிச் சென்ற பாண்டி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் U/S 457,380 IPC-ன் கீழ் கைது செய்தார்.
கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது.
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த முகமது மைதீன், முகமது யாசர் அராபத் மற்றும் முஹம்மது இக்பால் ஆகிய மூவரையும் ஆய்வாளர் திரு.ராஜ்குமார் சாமுவேல் அவர்கள் u/s Wild Life Protection Act 1972-ன் கீழ் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 169.49Kg கடல் அட்டைகளை பறிமுதல் செய்தார்.
கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்திசேரி பகுதியில் பணியிலிருந்த சார்பு ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களை அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தும், தலைமைக் காவலர் மீது கொலை முயற்சியிலும் ஈடுபட்ட சப்பாணி முருகேசன், ஞானவேல் பாண்டியன், ரவி சண்முகம், திருமூர்த்தி, வக்கீல் முத்துராமலிங்கம் ஆகியோர் மீது அபிராமம் காவல் நிலைய குற்ற எண்கள்: 54/06 u/s 147, 148, 341, 342, 307, 379(NP) @ 302 @ 120(B), 302, 396, 401 r/w 75 IPC மற்றும் 53/06 u/s 307 IPC-ன் பிரகாரம் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று 23.09.2020-ம் தேதி பரமக்குடி அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி திரு.மலர் மண்ணன் அவர்கள் மேற்படி எதிரிகள் 5 பேருக்கும் சார்பு ஆய்வாளரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 02,000/- அபராதமும், தலைமைக் காவலர் மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டதற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 01,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.