இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளுவதற்கு 2016-2017 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. மேற்படி, திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்.
1)தேவாலயங்களில் பீடம் கட்டுதல், 2)கழிவறை வசதி அமைத்தல், 3)குடிநீர் வசதிகள் உருவாக்குதல் , தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம் 1)10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1.00 இலட்சத்திலிருந்து ரூ.2.00 இலட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது. 2)15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.4.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 3)20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.3.00 இலட்சத்திலிருந்து ரூ.6.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி
பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில்
மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி