இராணிப்பேட்டை: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உலமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு,செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று உளமார உறுதியளிக்கிறேன்.
அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின் பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமான உறுதி அளிக்கிறேன்”. என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வுறுதி மொழியில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் “தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி” எடுக்கப்பட்டது.