இராணிப்பேட்டை: காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் இன்னுயிரை நீர்த்த காவலர்களுக்கு அக்டோபர் 21ஆம் நாள் ஆண்டு தோறும் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
1959 ஆம் ஆண்டு, இதேநாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.தீபா சத்யன் இ. கா. ப., அவர்களின் தலைமையில்,
அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. புகழேந்தி கணேசன், இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு, காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள், மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மலர் வளையம் வைத்து 60 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இராணிப்பேட்டை நிருபர்
திரு. S. பாபு