ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினசரி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 மாநில எல்லை சோதனை சாவடிகளிலும், மாவட்ட சோதனை சாவடிகளிலும் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்தனர்.
பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.