பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,கடைவீதிகள், என அனைத்து இடங்களிலும் எந்தவித அசம்பாவிதமும் நடந்திடாத வண்ணம் போதுமான காவலர்கள் ரோந்து மேற்கொள்ளவும் மற்றும் நகரில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் மோப்பநாய்ப்படை மற்றும் வெடிபொருள் செயலிழக்கும் படை பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.