திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகம் கலந்தபனையை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் அலெக்ஸ் பிரபாகரன் 34. மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த யாக்கோபு சீனிவாசன் என்பவரின் மகன் தாம்சன் 33. ஆகிய இருவரும் அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் தொடர்ந்து பிரச்சனைகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி காவல் ஆய்வாளர் திரு. அஜிகுமார் அவர்கள் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 ன் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.