சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்த காவல்துறையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று 02.03.24 தமிழ்நாடு பார்க்கவ குல சங்க மதுரை மண்டல தலைவர் திரு.ச.விஸ்வநாதன் தலைமையில், சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட பார்க்கவ குல இளைஞரணி தலைவர் திரு. ம.தாமஸ் பீட்டர் மற்றும் பாலா ,மோசஸ், விமல், கல்லுவழி கிராமத்தைச் சார்ந்த லூக்காஸ், ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக செல்வகுமார் ஆகியோர் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். மா.துரை இ.கா.ப., அலுவலகத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.