திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் இறைதுளிகள் இயக்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விபத்து, அறுவை சிகிச்சை மற்றும் பெண்களின் பிரசவ காலத்திற்கு இரத்தம் தேவைப்படும் காலத்தில் உரிய நேரத்தில் சென்று உதவி செய்து வருகின்றனர்.
எந்த ஒரு பிரதிபலனும் பார்க்காமல் உதவி செய்து வரும் இறைதுளிகள் இயக்கத்தை முன்னாள் ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களால் குத்துவிளக்கேற்றி துவக்கப்பட்டது. இதுவரை 305Unit இரத்தம் அவசர காலத்திற்கு ஏற்படுத்தி தந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் இரத்த தேவை அதிகம் தேவைப்படுவதால் இறை துளிகள் இயக்கத்தினர் இரத்த தானத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மொபைல் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இச்செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று துவக்கி வைத்து பாராட்டு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்