திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவல் காரணமாக முழுஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுதல் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை காவல்துறை எஸ்பி திரு.ரவளிப்பிரியா பார்வையிட்டார். கடைகளின் மூன்பு காலைமுதலே நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்தனர்.
இதன்காரணமாக போலீஸ் பாதுகாப்புடன் வரிசையில் நின்றவர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு மதுவிற்பனை தொடங்கியது. காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக்கடைகளின் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் மதுபானங்களை வாங்கி சென்றனர்.
ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்றிருப்பவர்களை மாவட்ட காவல்துறை எஸ்பி திரு.ரவளிப்பிரியா பார்வையிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா