பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் (09.01.2023), -ம் தேதி மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தின் முன்னதாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார். பின்னர் கலந்தாய்வு கூடத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலந்தாய்வு செய்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், மருத்துவத்துறையினர், சுகாதார துறையினர், போக்குவரத்து துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்பட பல துறையினர் கலந்து கொண்டனர்