பிறந்து 40 நாள் ஆன குழந்தை சாவு
மதுரை : மேல அனுப்பானடி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவருக்கு ஆண் குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆனது. அந்த குழந்தைக்கு சுடலைக்காளி என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் இருந்தபோது திடீரென்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை சுடலைகாளி உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து, தந்தை லோகேஸ்வரன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடைக்கடை சூறை உரிமையாளர் மீது தாக்குதல்
சிந்தாமணி ரோடு ராஜமான் நகரை சேர்ந்தவர் சூரிய நாராயணன் மகன் காளிதாஸ் (24), இவர் பைபாஸ் ரோட்டில் செல்போன் கடை முன்பாக வடை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு சொக்கலிங்க நகர் 7வது குறுக்கு தெரு குணசேகரன் மகன் ஆனந்த் என்ற பைபாஸ் ஆனந்த் (39) வந்தார். இவர் காளிதாஸுடன் தகராறில் ஈடுபட்டு அவரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். அவரை தாக்கியுள்ளார்.பின்னர் வடக்கடையை சூறையாடி சென்றுள்ளார். இது குறித்து காளிதாஸ் எஸ்.எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கி வடை கடையை சூறையாடிய ஆனந்த் என்ற பைபாஸ் ஆனந்தை கைது செய்தனர்.
பில்டிங் காண்டிராக்டர் உட்பட மூன்று பேர் தற்கொலை
மேல அனுப்பானடி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (58), இவர் கட்டிட காண்ட்ராக்டராக இருந்து வந்தார் .இவருடைய சகோதரருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவரது குடும்பத்தினர் இவரை புறக்கணித்து சகோதரருக்கு சப்போர்ட் செய்து உள்ளனர். இதனால் மணமுடைந்த மாரியப்பன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கட்டிட காண்ட்ராக்டர் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து மனைவி சாந்தி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனையூரில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தூக்கு : ஆனையூர் ராமமூர்த்தி நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அழகேசன் (57) இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் .அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய அண்ணன் குமரேசன் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
வண்டியூரில் வாலிபர் தற்கொலை : வண்டியூர் சங்கு நகர் அருள்தாஸ் மகன் பிரகாஷ் (32), இவருக்கும் இவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இரண்டு வருடங்களாக இவ்வாறு பிரிந்து வாழ்கின்றனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது மின்சார வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை அருள் தாஸ் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் 5 சிறுவர்கள் கைது மிளகாய்பொடி ஆயுதங்கள் பறிமுதல்
மதுரை கே .புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சியோன் ராஜா போலீசாருடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவர்கள் காந்திபுரம் கண்மாய்க்கரை வழியாகச் சென்றனர். அப்போது அங்கு வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் இருந்து அந்த வாளை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர் விசாரணையின் போது அவர் கே புதூர் பாண்டியன் நகர் கிருஷ்ணன் மகன் சங்கர் என்ற பாலசந்தர் (42) என்று தெரிய வந்தது.அவர் கொலை செய்யும் திட்டத்தில் பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.அவர் யாரை கொலை செய்ய எதற்காக கொலை செய்ய பதுங்கி இருந்தார் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த்புரத்தில் நான்கு சிறுவர்கள் கைது
ஜெய்ஹிந்த்புரம் சப் இன்ஸ்பெக்டர் அன்பு தாசன், இவர் போலீசாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர்கள் எம்.கே.புரம் ஜானகி நகர் முதல் தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக பதுங்கி இருந்த ஐந்துபேரை பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரித்த போது அவர்களில் நான்கு பேர் (17), வயது சிறுவர்கள் என்று தெரிய வந்தது. மற்றொருவர் நாகுபிள்ளைதோப்பு கணேசன் (19) ஆவார். அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் மிளகாய் பொடி பாக்கெட்டுகள் இரண்டு முதலியவற்றையும் பறிமுதல் செய்து அவர்கள் எதற்காக பதுங்கி இருந்தார்கள் என்ன திட்டத்தில் பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநகரில் பெண்ணிடம் பைக் ஆசாமிகள் கைவரிசை
தனக்கன்குளம் திருவள்ளுவர் தெரு அன்னை சிவகாமி தெருவை சேர்ந்தவர் மதிவாணன் மனைவி ஷர்மிளா (56), இவர் திருநகரில் நடந்த சென்றார் .அப்போது பைக்கில் வந்த இரண்டு ஆசாமிகள் அவர் வைத்திருந்த கேண்ட்பேக்கை பறித்துச் சென்று விட்டனர். அந்த பேக்கில் ரூ 40 ஆயிரமும் செல்போனும் வைத்திருந்தார்.இந்த வழிப்பறி குறித்து சர்மிளா திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் செல்போனை கேன்ட்பேக்குடன் பறித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி