திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் இந்துமத வேடமிட்ட ஒரு சிறுவன் இறுதிச்சடங்கு செய்வதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல் என பள்ளபபட்டி வி.ஏ.ஓ. லோகநாதன் நகர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, த. மு. மு. க பிரச்சார நகரச் செயலாளர் அப்துல் ஹக்கீம், 30, வேடப்பட்டி பொன்னுச்சாமி 27, முகமது பெரோஸ் 21, நாகல் நகர் முஜிபூர் ரகுமான் 29, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.