திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் ஆவி பிடிப்பதன் மூலம் விரட்டியுள்ளனர்.
இதன் மூலம் நுரையீரலிலுள்ள கொரோனா வைரஸ் அழிந்து விடுகிறது என ஆதாரப்பூர்வமாக எடுத்து கட்டியுள்ளனர். இதையடுத்து ஆவி பிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ்நிலையத்தில் அதற்கான ஏற்பாடு நடந்தது.ரெட்டியார்சத்திரம் சார்பு ஆய்வாளர் ஷேக் தாவூத் மற்றும் காவலர்கள், முன களப்பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள் நலன் கருதி மூலிகை ஆவி பிடிப்பதற்கான ஏற்பாடு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: மனித உயிர்களை மலிவாக கொரோனா வைரஸ் ஆக்கிவிட்டது. அதனால் நமது உடல் பலம் பெற ஆவியே மிகச்சிறந்த வைத்தியமாகும். நமது முன்னோர்கள் ஆவி பிடித்து பல நோய்களை விரட்டி உள்ளனர். 10 முதல் 15 நிமிடங்கள் ஆவி பிடித்தால் நுரையீரல் தொற்று உட்பட பல பல நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும்.
ஆகவே எளிமையான ஆவிபிடிப்பதை,நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். வெறும் தண்ணியிலோ, மூலிகை தண்ணீரிலோ ஆவி பிடிக்கலாம், என்றனர். பொதுமக்களின் நலன் கருதி செயல்படும் ரெட்டியார்சத்திரம் போலீசாரை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா