திருநெல்வேலி: ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆத்தூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் வடக்கு மரந்தலை பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் அந்தோணி (47) என்பவர் ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து அந்தோணி என்பவரை கைது செய்தார்.