திருநெல்வேலி: முழு ஊரடங்கு காலத்தில் வள்ளியூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி வழங்கியும் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை வள்ளியூர் காவல் நிலையம் சார்பாக உதவி ஆய்வாளர் திரு.அருண்ராஜா அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் காவல்துறை சார்பில் வள்ளியூர் பகுதியில் ஆதரவின்றி இருப்பவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் வைட் கிராஸ் (white cross) என்னும் இளைஞர்கள் குழு அமைத்து அதன் மூலம் சாப்பாடு அளித்து வருகின்றனர். காவல்துறையின் இச்செயல் அப்பகுதி பொதுமக்களிடம் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ளது.