இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடை முதல் விற்பனையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா. ப., அவர்கள் துவங்கிவைத்தார் ,உடன்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்து கருப்பன் ( இணைய வழி குற்றப்பிரிவு) இராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு , அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக், மற்றும் ஆயுதப்படை ஆளிநர்கள் உடன் இருந்தனர். மேலும் இந்த விற்பனையில் பட்டாசுகள் காவலர்களின் குடும்பங்களுக்கு மானிய விலையிலும் மற்ற பொதுமக்களுக்கு குறிப்பிட்ட சலுகை விலையிலும் இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில், விற்பனை செய்யப்படுகின்றது என்பதனை தெரிவிக்கப்படுகிறது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்