செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரிடம் ஆன்லைன் மூலமாக ஏமாற்றப்பட்ட ரூபாய்.90,000 பணத்தை புகார் அளித்த ஒரே வாரத்தில்,செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். மீட்ட பணத்தை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன்.இ.கா.ப., அவர்கள் புகார்தாரரிடம் வழங்கினார். அவருடன் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு.அ.பிரதீப்.இ.கா.ப.,அவர்கள் உடன் இருந்தார்.