நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிய கூடிய திரு.தங்கராஜ் மற்றும் காவலர் மாஸ்கோ ஆகியோர் ஆதரவற்ற ஆண் சடலம் ஒன்று இறந்து கிடந்தது இதனை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களின் அடையாளத்திற்காக 5 நாட்கள் வைக்கப்பட்டது பின்னர் உறவினர்கள் யாரும் வராத காரணத்தால் காவலர்கள் தானே குழி தோண்டி அந்த ஆதரவற்ற ஆண் சடலத்தை நல்லடக்கம் செய்தனர். இவர்களின் இந்த மனித நேயமிக்க செயலைப் பாராட்டி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.