சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்சாபுரம், நொச்சி குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் 36, என்பவர் அவருக்கு சொந்தமான ஆட்டோவில் தோணித்துறை பஸ்ஸ்டாபில் வைத்து ஆட்களை ஏற்றும்போது.
திருநெல்வேலி: சீவலப்பேரி சேர்ந்த சண்முகதுரை 21, என்பவர் அவரது ஆட்டோவுடன் சென்று செல்வகுமார் ஆட்டோவிற்கு முன்நிறுத்தி செல்வகுமாரை பார்த்து நீ எப்படி ஆட்களை ஏற்றலாம் என்று அவதூறாக பேசி அருகில் கிடந்த மண் வெட்டியால் தாக்கும்போது செல்வகுமார் தடுத்ததில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
பின் நீ எப்படி வெளியூர் ஸ்டாண்டில் இருந்து கொண்டு நான் எடுக்கும் ரெகுலர் ஆட்களளை ஏப்படி ஏற்றலாம் என சொல்லி அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து செல்வகுமார் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ் அவர்கள், விசாரணை மேற்கொண்டு செல்வகுமாரை தாக்கிய சண்முக துரையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.