திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார். இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து உட்கோட்டங்களிலும் உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் ஆயுத உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளுடனான காவல்துறை கலந்தாலோசனை கூட்டம் 50 இடங்களில் நடைபெற்றது.
இதில் ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆயுத விற்பனை குறித்து பதிவேடுகளை பராமரிக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது .
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் பயணிக்கும் பட்சத்தில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும். அவர்களுக்குள் Whatsapp குழு ஒன்றை உருவாக்கி தகவல்களை சேகரித்து தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்