திருவள்ளூர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் (ம) பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக 230 பயனாளிகளுக்கு பட்டா, 51 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத்திற்க்கான ஆணை மற்றும் 22
பயனாளிகளுக்கு பல்வேறு வகையான சான்றுகள் ஆக மொத்தம் 303 பயனாளிகளுக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். திரு.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., ஆகியோர் இன்று (27.072021) நலத்திட்டங்களை வழங்கினர். உடன் ஆவடி வட்டாட்சியர் திரு.செல்வம், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திரு.மணிகண்டன், தனி வட்டாட்சியர் (நத்தம்) திரு.வில்சன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை