திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அகிலன் 31, என்பவர் தினமும் மது அருந்திவிட்டு அவரது தாயார் கனகாவிடம் தகராறு செய்துள்ளார். இதனை அக்கா மகன் என்ற முறையில் அதே பகுதியை சேர்ந்த எலிசபெத் ராணி 42 கண்டித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அகிலன் எலிசபெத் ராணி,கனகாவிடம் அவரது வீட்டின் முன் நின்று பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த அகிலன் எலிசபெத்ராணியை அவதூறாக பேசி,கண்ணத்தில் அடித்து,காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இது குறித்து எலிசபெத் ராணி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.பத்மநாபபிள்ளை அவர்கள் விசாரணை மேற்கொண்டு பெண்ணை அடித்து மிரட்டல் விடுத்த அகிலனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.