திண்டுக்கல்: வத்தலக்குண்டு எழில் நகரில்இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும்நாகராஜ் மனைவி தமிழரசி, 24. இவர் வீட்டில் போலி பீடி பண்டல்கள் குட்கா பண்டல்கள்மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் திரு.குமரன் மற்றும் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் பெறுமான 450 பீடி பண்டல்கள் 114 குட்காபண்டல்கள்16 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது
அவற்றைபறிமுதல்செய்தபோலீசார் தமிழரசியைவிசாரணை செய்தனர்.விசாரணையில் வத்தலகுண்டு கமர்தீன் மகன்இஸ்மாயில், 50,நட்பின் காரணமாக தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக கூறினார் .
அதைத் தொடர்ந்து போலீசார் கமர்தீன்,தமிழரசி 2 பேரையும் கைது செய்தனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தகம்பம் உசேன் என்பவரை தேடி வருகின்றனர் இச்சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.