திருநெல்வேலி: கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் உதவி ஆய்வாளர் திரு ஆழ்வார் அவர்கள் அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியும், கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பஜார் பகுதிகளில் ஒலிபெருக்கியின் மூலம் பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்