மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு, ஜன. 17.ல் நடைபெறுகிறது. இதை ஒட்டி, ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக ஆய்வு செய்யும் பணியை, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி .மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ராக், டி. ஐ. ஜி. பொன்னி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், வட்டாட்சியர் வீரபத்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி ஆகியோர்கள் ஆய்வு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி