மதுரை : ஆதித்தமிழர் பேரவை சார்பில் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய அயோத்தி கோவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா உருவ பொம்மையை எரித்து எச்சரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அலங்கை ஒன்றியச் செயலாளர் அகத்தியன் தலைமை வகித்தார்.
மாநில துணை பொது செயலாளர் கார்த்திக், தலித் ராஜா, வீரா செல்வம், மாவட்டச் செயலாளர் தமிழ் குமரன், மாநகர் மாவட்ட ச் செயலாளர் லட்சுமி சசிகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அலங்கை சாந்தி, மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் போலீஸார், உ.பி. சாமியார் உருவ பொம்மையை எரிக்க விடாமல், பறித்துப் சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி