திருநெல்வேலி: கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்து அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு பாதுகாப்பு பணிகள் செய்து வரும் முன் களப்பணியாளர்களான, கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு, கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினரின் ஏற்பாட்டில் அரிசி, பருப்பு மற்றும் எண்ணை பொருட்களை அம்பாசமுத்திரம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு பிரான்சிஸ், அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு முருகேசன் அவர்கள் கல்லிடைக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கினார்கள். மொத்தம் 100 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பொருட்களை வழங்கினார்கள்.