சேலம்: கொத்தம்பாடி வசிஷ்ட நதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்,
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வசிஷ்ட நதிக்கு சென்று பார்வையிட்டபோது வசிஷ்ட நதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர்.
நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.