சேலம் : எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள சரபங்கா நதி பாலத்தின் கீழ் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சேறு நிறைந்த பகுதியில் கிடந்ததை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக எடப்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி இறந்தவரைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.