திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
03.05.2021
உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தெய்வதிரு ஆறுமுகம் அவர்கள் 01.05.2021 அன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வதிரு முகமது ஆரிஃப் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 02.05.2021 அன்று மரணம் அடைந்தார்.
அவர்களுக்கு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறையினர் அனைவரும் அவர்களது திரு உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் தலைமை காவலர் ஆறுமுகம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முகமது ஆரிஃப் அவர்களின் இழப்பு, அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்பிக்கிறோம் என்று கூறினார்.
இந்த அஞ்சலியில் திருநெல்வேலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு சுப்பாராஜு,தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு ராஜேஷ், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு மரிய கிளாஸ்டன் ஜோஸ், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.