திருவள்ளூர்: திருத்தணியில் இருசக்கர வாகன தணிக்கை செய்ய வேண்டுமென்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் திருத்தணியில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், திருத்தணி போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஜெயக்குமார், திருத்தணி சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் திரு.கிருஷ்ணராஜ், மேலும் குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர்கள் திருத்தணி பை-பாஸ் சித்தூர் சாலை சந்திப்பு பகுதியில், இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்,
இந்த அதிரடி இருசக்கர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது அந்த பகுதி வழியாக வந்த 330 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,
இதில் 1) இருசக்கர வாகனத்தில் வந்த தலைக்கவசம் அணியாமல் வந்த 196 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, 2)இருசக்கர வாகனத்தில் வாகன பதிவு எண்ணை அரசு விதித்த விதியை மீறி வாகனத்தில் பதிவு எண் இல்லாத ஒழுங்கற்ற முறையில் இருந்த 70 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,
மேலும் 3) செல்போன் பேசிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, 4)இருசக்கர வாகன ஓட்டிகள் லைசன்ஸ் இல்லாமல் வந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,
5) இரு சக்கர வாகனத்திற்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வந்த 5 வாகனமும் இதில் உள்ளடக்கி அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மொத்தம் 330 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, இவர்களிடம் 31 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்,
போலீசார் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அவர்களின் இந்த அதிரடி உத்தரவில் இன்று திடீர் வாகன சோதனையில் இன்று மிரண்டு போயினர் திருத்தணியில் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது…